இலங்கையின் பொருளாதார வளர்ச்சியினையும் சமூக முன்னேற்றத்தினையும் துரிதப்படுத்துவதற்குக் கொள்கை ஆக்கம், திட்டமிடல் மற்றும் அமுலாக்கம் ஆகியவற்றினை மேற்கொள்வதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ஒரு அங்கமாக தேசிய திட்டமிடல் திணைக்களம் செயற்படுகின்றது. இத்திணைக்களம் தேசிய நோக்கில் கொள்கைகள், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்கள் ஆகியவற்றினை வழங்குவதுடன் துறை ரீதியிலான ஏனைய நிறுவனங்களின் பிராந்திய நோக்கினையும் வழங்குகின்றது. இது திறைசேரியில் அமைந்துள்ளதுடன் திறைசேரியுடனும் அதன் திணைக்களங்களுடனும் நெருங்கிய இடைத்தொடர்புகளைப் பேணுகின்றது.

 

தூர நோக்கு

தேசத்தின் மிகை திறனுடைய கொள்கை ஆலோசகராகவும் அபிவிருத்தியில் வசதியளிப்பவராகவும் இருத்தல்.

 

பணிக்கூற்று

நாட்டில் காணப்படும் வரையறுக்கப்பட்ட மூலவளங்களினூடாக உச்ச பயனைப் பெறக்கூடிய வகையில் சிறப்பான திட்டமிடல் அணுகுமுறைகளைப் பின்பற்றி கொள்கை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை உருவாக்குவதில் உயர்ந்தபட்ச தொழில்வாண்மையைப் பேணும் வகையில் சர்வதேச தரத்திலான திட்டமிடல் திறன்களைத் தொடர்ச்சியாக மேம்படுத்துதல்.

 

பிரதான தொழிற்பாடுகள்

  • தேசிய மற்றும் துறை ரீதியிலான கொள்கைகளை வகுப்பதில் உதவுதல்
  • நீண்டகால, நடுத்தர கால அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்தல்:  பொது முதலீட்டு நிகழ்ச்சித் திட்டம்
  • கருத்திட்டங்களை மதிப்பீடு செய்தல்
  • அமைச்சரவை விஞ்ஞாபனங்களுக்கு அவதானிப்புகளை வழங்குதல்
  • துறை ரீதியிலான அணுகுமுறைகளை மேம்படுத்தல்: கருத்திட்ட முன்மொழிவு இருப்பைத் தயாரித்தல்
  • திட்டமிடலுக்கான வழிகாட்டல்களைத் தயாரித்தல்
  • பிராந்திய மட்ட அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பதற்கான வழிகாட்டல்களை வழங்குதல்
  • பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம்
  • அபிவிருத்திப் பங்காளர்களின் தூதுக்குழு முகாமை
  • திணைக்களத்திற்குச் சாட்டப்படும் விசேட பணிகளை நிறைவேற்றுதல்
  • ஊழியர்களின் திறன் அபிவிருத்திச் செயற்பாடுகள்
  • பொது நிர்வாகம்