தேசிய திட்டமிடல் திணைக்களம்,  ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் (JICA) இணைந்து சகல அமைச்சுக்கள் மற்றும் மாகாணசபைகள் ஆகியவற்றின் அபிவிருத்தித் திட்டமிடல்களில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கான 'மூலோபாயக் கருத்திட்டத் தயாரித்தல்' எனும் தலைப்பில் முழுநாள் பயிற்சிப்பட்டறையொன்றினை 3 குழுக்களாகப் பிரித்து 2018 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 14, 21 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடாத்தியது. இப்பயிற்சிப்பட்டறையின் நோக்கங்களாக முன்மொழியப்பட்ட திருத்திய கருத்திட்டச் சமர்ப்பிப்பு வடிவத்தினை அறிமுகம் செய்வதுடன் மேலும் அலுவலர்களின் மூலோபாயக் கருத்திட்டத் தயாரிப்பிலும் மதிப்பீட்டிலும் ஈடுபடும் தன்மையை செயல்முறை அமர்வுகளின் மூலம் அதிகரிக்கச் செய்வதுமாக இருந்தன. இதற்கு மொத்தமாக 170 அ​லுவலர்கள், 41 நிரல் அமைச்சுக்களிருந்தும் 9 மாகாணசபைகளிருந்தும் பங்குபற்றினர்.  பயிற்சிப்பட்டறையானது திட்டமிடலுடன் தொடர்புடைய கலைச்சொற்களைக் கொண்ட தத்துவ ரீதியிலான அமர்வினையும் கொடுக்கப்பட்ட விடய ஆய்வுகளை உபயோகித்து பிரதான கருத்திட்டக் கூறுகளை இனங்காணும் செயல்முறை அமர்வினையும் கொண்டிருந்தது. பயிற்சிப்பட்டறையானது விரிவான கருத்திட்ட முன்மொழிவினைத் தயாரிப்பதற்கான அனுபவத்தினையும் பரந்த அறிவினையும் வழங்கி வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

         

    

     

தெற்காசியப் பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு (SASEC) வர்த்தக உதவிகள் மற்றும் போக்குவரத்து பணிக்குழுக்கூட்டமானது மாசி மாதம் 7 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் கொழும்பிலுள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.


 

 

 

 

 

தெற்காசியப் பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு (SASEC) வர்த்தக உதவிகள் மற்றும் போக்குவரத்து பணிக்குழுக்கூட்டமானது மாசி மாதம் 7 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் கொழும்பிலுள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

தெற்காசியப் பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு (SASEC) வர்த்தக உதவிகள் மற்றும் போக்குவரத்து பணிக்குழுக்கூட்டத்தின் நோக்கங்கள் நடைமுறையிலுள்ள வர்த்தக உதவிகள் மற்றும் போக்குவரத்து என்பவற்றில்  தெற்காசியப் பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்புக்கருத்திட்டங்களின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல், தெற்காசியப் பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு துாரநோக்கு ஆவணம் சம்பந்தமாக கலந்துரையாடல், அங்கீகரித்தல் மற்றும் 2016 - 2025 காலப்பகுதிக்கான  செயற்பாட்டுத் திட்டத்தினை மாற்றியமைத்தல் என்பனவாகும். பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அலுவலர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஆகியோர் இதில் பங்குபற்றினர். தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. சஞ்சய முதலிகே தெற்காசியப் பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பின் இலங்கைக்கான இணைப்பு (Nodal) அதிகாரியாகக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியாத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. ஹுன் கிம் கூட்டத்திற்கு இணைத்தலைமை தாங்கினார். தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் கௌரவ நிரோஷன் பெரேரா ஆரம்ப அமர்வின் பிரதம விருந்தினராக வருகை தந்ததுடன் ஆரம்ப உரையினையும் ஆற்றினார். அவரது உரையில் உலகப் பொருளாதார வளர்ச்சியில் ஆசியாவின் தாக்கம் மற்றும் அபிவிருத்தி விளைவுகளின் நன்மைகளை சகல உறுப்பினர்களும் அடைந்து கொள்வதற்குத் தெற்காசியப் பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு (SASEC) பிராந்தியக் கூட்டு சந்தர்ப்பத்தினை வழங்குகின்றது எனவும் குறிப்பிட்டார். தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு. எம். ஐ. எம். ரபீக் மற்றும் திரு. ஹுன் கிம் ஆகியோர் வரவேற்பு மற்றும் ஆரம்ப உரைகளை ஆற்றினார்கள்.