பொருளாதார அபிவிருத்தி உபாயம்

பொருளாதார உபாயத்தின் பிரதான நோக்கம் சமூகப் பொருளாதார நோக்கு, அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் அரசாங்கத்தின் முதலீட்டு உபாயங்களில் மாற்றம் என்பவற்றினை பிரதிபலிக்கக்கூடிய ஐந்து பிரதான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதனை உறுதிப்படுத்துவதாகும். இந்த வகையில், அரசாங்கத்தின் ஐந்து அபிவிருத்தி இலக்குகளாக பின்வருவன காணப்படுகின்றன.

1. ஒரு மில்லியன் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல்

2. வருமான மட்டத்தினை அதிகரித்தல்

3. கிராமிய பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்தல்

4. கிராமிய, பெருந்தோட்ட, நடுத்தர வகுப்பினர் மற்றும் அரசாங்க  

   ஊழியர்களுக்கான காணி உரிமையினை உறுதிப்படுத்தல்

5. பரந்த மற்றும் வலுவான நடுத்தர வகுப்பொன்றினை உருவாக்குதல்

 

பொருளாதார உபாயத்தின் பிரதான வகுதிகள்

                                                                                                                                                                              

                                                                2020 ஆம் ஆண்டிற்கான பேரண்டப் பொருளாதார இலக்குக் குறிகாட்டிகள்

நான்கு வருட காலத்திற்கான பேரண்டப் பொருளாதார இலக்குகள் அட்டவணை 1 இல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது தற்பொழுது காணப்படும் 4.8 சதவீதத்திலிருந்து 2020 அளவில் 7 சதவீதமாக அதிகரிக்கும். மொ..உற்பத்தியானது 125 பில்லியன் ..டொலராக அதிகரிக்கப்படுவதுடன் 2020 அளவில் தலா வருமானம் 5,797 ..டொலராக அதிகரிக்கப்படும். இவை இலங்கையினால் உயர் நடுத்தர வருமான பொருளாதார அந்தஸ்த்தினை அடைந்து கொள்வதற்கு முக்கிய நிகழ்வுகளாக அமையும். மொ..உற்பத்தியில் பங்கொன்றாக அரசாங்கத்தின் வருமானம் மற்றும் மானியங்கள் 2020 அளவில் மொ..உற்பத்தியின் 3.5 சதவீத மட்டத்திற்கு படிப்படியாக குறைக்கப்படும்.

 

அட்டவணை 1 : பேரண்டப் பொருளாதார இலக்குக் குறிகாட்டிகள் -  2020

(%  மொ.. )

சுட்டிகள்     

எதிர்வுகூறல்

 

2017

2018

2019

2020

மொ...வளர்ச்சி விகிதம்

6.0

6.5

7.0

7.0

முதலீடு

30.3

31.0

31.5

31.5

தனியார் முதலீடு

25.1

25.6

25.8

25.8

பொது முதலீடு

5.2

5.4

5.6

5.7

மொத்தச் செலவினம்

20.2

20.3

20.4

20.4

வருமானம் மற்றும் மானியங்கள்

15.5

16.0

16.4

16.9

நடைமுறைக் கணக்கு மீதி

0.5

1.1

1.6

2.2

வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை

-4.6

-4.3

-4.0

-3.5

உள்நாட்டு சேமிப்புகள்

23.8

25.0

25.9

26.4

மூலம்: பொது முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் 2017 – 2020, தேசிய திட்டமிடல் திணைக்களம்

 

 

2017-2020 காலப்பகுதிக்கான துறை ரீதியான முதலீடுகள்

2017 – 2020 காலப்பகுதியில் பொது முதலீட்டின் வருடாந்த விபரங்கள் அட்டவணை 2 இல் பிரதான எட்டு துறைகளின் கீழ் காட்டப்பட்டுள்ளது. அதற்கமைவாக குறிப்பீடு செய்யப்பட்ட காலப்பகுதியின் போது பொது முதலீடானது மொ..உற்பத்தியில் 5.5 சதவீத மட்டத்தில் பேணப்படும்.

 

அட்டவணை 2 : துறை ரீதியான முதலீடுகள்  2017-2020 (ரூபா.மில்லியன்)

துறை

2017

.செ.திட்டம்

எதிர்வுகூறல்கள்

2017-2020 திரட்டிய

மொத்தம் %

2018

2019

2020

1. மனிதவள    அபிவிருத்தி

153.5

173.3

200.4

229.1

756.3

21.4

    கல்வி

99.1

111.4

129.1

148.3

487.8

13.8

    சுகாதாரம்

43.6

50.3

58.9

67.6

220.5

6.2

2. விவசாயம்

35.6

45.7

46.1

53.2

180.6

5.1

    கால்நடைத்துறை

6.2

12.7

6.3

7.6

32.8

0.9

    பெருந்தோட்டம்

8.3

9.5

11.1

12.7

41.5

1.2

    கடற்றொழில்

6.0

7.0

8.2

9.4

30.5

0.9

3. கைத்தொழில், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா

87.4

89.7

94.0

98.6

369.7

10.5

4. உட்கட்டமைப்பு

268.4

327.6

412.8

479.3

1,488.1

42.1

     வீதிகள்

116.1

144.0

201.0

247.0

708.1

20.1

     தரைப் போக்குவரத்து

35.0

40.4

47.3

54.3

176.9

5.0

     துறைமுகம் மற்றும்         

     விமானசேவை

1.3

2.2

3.0

3.5

10.0

0.3

    நீர்வழங்கல் மற்றும்    

    கழிவகற்றல்

26.7

38.7

42.0

45.4

152.7

4.3

5. நல்லாட்சி

72.1

81.6

91.0

94.3

338.9

9.6

6. சுற்றாடல் முகாமைத்துவம்

9.2

10.6

12.3

14.2

46.3

1.3

7. சமூகப் பாதுகாப்பு

13.9

11.7

8.3

7.5

41.5

1.2

8. பிராந்திய அபிவிருத்தி

68.8

73.8

79.0

88.1

309.7

8.8

முழு மொத்தம்   

708.8

814.0

943.9

1064.2

3,530.9

100.0

மூலம்: பொது முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் 2017 – 2020, தேசிய திட்டமிடல் திணைக்களம்

 

 

                                                                   2017-2020 காலப்பகுதிக்கான கருத்திட்ட வகையின் அடிப்படையில் துறை ரீதியான முதலீடு

நடைமுறையிலுள்ள கருத்திட்டங்கள், வருடாந்த நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் புதிய கருத்திட்டங்கள் ஆகிய கருத்திட்ட வகையின் அடிப்படையில் மொத்த முதலீட்டுக்கான ஒதுக்கீட்டினை அட்டவணை 3 காட்டுகின்றது. இதற்கமைவாக நடைமுறையிலுள்ள கருத்திட்ட வகையானது 51 சதவீத ஆகக் கூடிய முதலீட்டு ஒதுக்கீட்டினை பெற்றுள்ளது. வருடாந்த மற்றும் புதிய கருத்திட்டங்கள் என்பவற்றுக்கான ஒதுக்கீடு முறையே 22 மற்றும் 27 சதவீதமாகும்.

 

அட்டணை 3 : 2017-2020 கருத்திட்ட வகையின் அடிப்படையில் துறை ரீதியான முதலீடு

 (ரூபா. பில்லியன்)

துறை

வகை

2017

.செ.திட்டம்

எதிர்வுகூறல்கள்

2017 - 2020 திரட்டிய

2018

2019

2020

மனிதவள அபிவிருத்தி

நடைமுறையிலுள்ள

89.2

80.8

84.7

84.2

339.0

வருடாந்த

21.3

40.7

46.8

54.3

163.2

புதிய

43.0

51.7

68.9

90.6

254.2

விவசாயம்

நடைமுறையிலுள்ள

8.7

12.4

8.5

8.8

38.3

வருடாந்த

15.2

15.3

18.2

19.4

68.2

புதிய

11.7

18.0

19.4

25.0

74.1

கைத்தொழில்,வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா

நடைமுறையிலுள்ள

39.3

39.2

42.0

44.1

164.6

வருடாந்த

14.5

16.8

17.3

17.8

66.4

புதிய

33.6

33.8

34.7

36.7

138.8

உட்கட்டமைப்பு

நடைமுறையிலுள்ள

196.8

192.0

247.2

268.8

904.8

வருடாந்த

55.2

79.7

74.8

77.4

287.1

புதிய

16.4

55.8

90.8

133.1

296.2

நல்லாட்சி

நடைமுறையிலுள்ள

47.1

56.4

64.1

66.9

234.5

புதிய

24.9

25.3

26.8

27.5

104.5

சுற்றாடல் முகாமைத்துவம்

நடைமுறையிலுள்ள

3.9

4.5

4.5

4.0

16.9

வருடாந்த

4.2

3.7

3.7

5.8

17.4

புதிய

1.1

2.3

4.1

4.4

11.9

சமூகப் பாதுகாப்பு

நடைமுறையிலுள்ள

10.4

5.9

3.9

3.0

23.3

வருடாந்த

2.0

2.8

2.7

2.7

10.3

புதிய

1.6

2.9

1.7

1.7

7.9

பிராந்திய அபிவிருத்தி

நடைமுறையிலுள்ள

33.4

21.8

19.0

7.9

82.0

வருடாந்த

18.8

36.6

48.1

64.1

167.6

புதிய

16.6

15.4

11.9

16.1

60.1

கருத்திட்ட வகையில் ஒதுக்கீடு

நடைமுறையிலுள்ள

428.8

413.0

473.9

487.7

1,803.4

வருடாந்த

131.2

195.6

211.6

241.5

779.9

புதிய

148.9

205.2

258.3

335.1

947.5

முழு மொத்தம்      

 

708.8

814.0

943.9

1,064.2

3,530.9

மூலம்: பொது முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் 2017 – 2020, தேசிய திட்டமிடல் திணைக்களம்

 

 

 

பொது முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - இலக்குகள் 2020

அட்டவணை 4 இல் துறை ரீதியிலான 2020 ஆம் ஆண்டிற்கான இலக்குகள் காட்டப்பட்டுள்ளன.

அட்டவணை 4 :  பொது முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - இலக்குகள் 2020

சுட்டி

2015

2020

மனிதவள அபிவிருத்தி

நிலைத்திருப்போர் விகிதம் (தரம் 1-11) (%)

86

100

.பொ. சா/தரத்திலிருந்து ..பொ. /தரம் (%)

69.33

80

.பொ. /தரத்திலிருந்து பல்கலைக்கழக அனுமதி தகுதி (%)

62.35

80

அரச பல்கலைக்கழக புதிய அனுமதி (எண்.)

25,676

50,000

திறன் கல்விக்கான புதிய அனுமதி (எண்.)

182,829*

350,000

இளைஞர் வேலையின்மை விகிதம் (%)

20.7

14.1

டீஜிற்றல் அறிவு (%)

25*

40

.தொ/பி.பீ.. ஏற்றுமதி வருமானம் (..டொ. மில்)

910*

5,000

தாய் மரண விகிதம் (100,000 உயிருடனான பிறப்புகளுக்கு)

34.2

25

சிசு மரண விகிதம் (1,000 உயிருடனான பிறப்புகளுக்கு)

8.0

6.0

தொற்றா நோயினால் முதிர்வடைவதற்கு முன்னரான மரணம்(<65 வருடங்கள்) (%)

18

9

விவசாயம்

பழங்கள், மரக்கறிகள், வெட்டுப்பூ, வாசனைத்திரவியங்கள் மற்றும் ஏனைய ஏற்றுமதிப் பயிர்கள் போன்ற தெரிவு செய்யப்பட்ட விவசாய ஏற்றுமதிகளிலிருந்து வருமானம் (..டொ. பில்)

0.5

1

தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு ஏற்றுமதி வருமானம் (ரூபா.பில்)

295.3*

565.5

மீன், மீன்பிடி உற்பத்திகளின் ஏற்றுமதி வருமானம் (..டொ. பில்)

0.2

1.5

திரவப் பாலில் தன்னிறைவு (%)

44

100

கைத்தொழில், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா

 

 

கைத்தொழில் துறையில் வேலைவாய்ப்பு (எண். மில்.)

2

3

கைத்தொழில் மொ... கைத்தொழிலில் பங்களிப்பு  (%)

28.5

30

ஏற்றுமதி வருமானங்கள் (..டொ. பில்)

11.1

20

சுற்றுலா பயணிகளின் வருகை (எண். மில்.)

1.79

4.5

சுற்றுலா வருமானம் (..டொ. பில்.)

2.92

10

உட்கட்டமைப்பு

 

 

புகையிரத பயணிகள் போக்குவரத்து பங்கு (%)

5

10

மொத்த கொள்கலன் போக்குவரத்து  (ரிஇயூஎஸ்000)

5.2

6.8

பாரம்பரியமற்ற புதுப்பித்தல் சக்தி மூலங்களிலிருந்து மின் உற்பத்தி (%)

11

20

மொத்த நீர்ப்பாசனத்திற்கான பரப்பு (ஹெக்டெயர்)

744,983

850,000

வழிந்தோடும் நீரின் அளவினைக் குறைத்தல் (எம்சிஎம்)

28,000

21,500

பாதுகாப்பான குடிநீர் அளவு கிடைப்பனவு (%)

86

100

துப்பரவேற்பாட்டு வசதி (%)

87

100

சுற்றாடல்

 

 

வனவளம் (%)

29

32

சமூகப் பாதுகாப்பு

 

 

பெண் ஊழியர்படை பங்களிப்பு விகிதம் (%)

36

40

ஆரம்ப பாடசாலை அனுமதி (%)

85

100

*  2014 உடன் தொடர்பான தரவு

** எச்எச்எஸ் இற்கு பிரத்தியேகமானது மூலம்: பொது முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் 2017 – 2020, தேசிய திட்டமிடல் திணைக்களம்